நடிகர் அஜித்-தின் படம் கைவிட்டுப் போனதுக்காக வெளியிட்ட பதிவா? சமீபத்திய விக்னேஷ் சிவன் பதிவு!

தமிழ் சினிமாவில், ‘நானும் ரவுடி தான்’, ‘NGK’, ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ போன்ற சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கியவர் விக்னேஷ் சிவன். இந்த திரைப்படங்கள் மூலம் சிறந்த இயக்குனர் என்று பெயர் பெற்ற விக்னேஷ் சிவன் நடிகர் அஜீத்தை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க போவதாக கடந்த ஆண்டு அறிவிப்புகளை வெளியிட்டார்.

இதைத் தொடர்ந்து, விக்னேஷ் சிவன் மற்றும் அஜீத் இணையும் புதிய திரைப்படம் மீது எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகள் காணப்பட்டன. ஆனால், ஒரு சில காரணங்களாக விக்னேஷ் சிவன் அஜீத்தை இயக்கவில்லை என கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.

அதாவது, இயக்குனர் விக்னேஷ் சிவனின் கதையில் விருப்பம் இல்லாததால் நடிகர் அஜீத் அந்த படத்தை கைவிட்டதாக சொல்லப்பட்டது. தொடர்ந்து, இயக்குனர் மகிழ்திருமேனி, நடிகர் அஜீத்தின் புதிய திரைப்படத்தை இயக்குவதாகவும் தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், நடிகர் அஜீத்தை இயக்குவதாக விக்னேஷ் சிவன் அறிவித்து இன்றுடன் ஒரு ஆண்டு கடந்துள்ளது.

இதனை குறிக்கும் விதமாக, ‘கெடச்சது இழக்கிறது, இழந்தது கெடைக்குறதும், அதுக்கு பழகுறதும் நியாயம் தானாடி’ என ‘நானும் ரவுடி தான்’ திரைப்படத்தின் பாடல் வரிகளை சமூக வலைதளத்தில் ஷேர் செய்த இயக்குனர் விக்னேஷ் சிவன். இந்த பதிவு, அஜீத்தின் படம் கைவிடப்பட்டதை குறிக்கும் விதமாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Written by