தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் ராம்சரண். கடந்த 2007 ஆம் ஆண்டு ‘சிறுத்தை’ என்ற திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் ஏகப்பட்ட ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
இவரது நடிப்பில் வெளியான ‘மாவீரன்’ திரைப்படம் பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது கவனிக்கத்தக்கது. சமீபத்தில் ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ஆர்.ஆர்.ஆர் படத்திலும் நடிப்புத் திறமையால் கலக்கியிருந்தார். அடுத்த படத்தின் சூட்டிங்-ம் மும்முரமாக சென்று கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க விருப்பம் இருப்பதாக நடிகர் ராம்சரண் தெரிவித்துள்ளார். அதாவது, ‘விளையாட்டை மையமாக கொண்ட திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பது எனது விருப்பம்.
விராட் கோலியின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும். நான் கோலியை போல தோற்றம் கொண்டிருப்பதால் அவரது வாழ்க்கை வரலாற்றில் நடிக்க பொருத்தமாக இருக்கும்’ என குறிப்பிட்டுள்ளார்.