மீண்டும் ஜீவா-வை இக்கட்டில் மாட்டி விட்ட மூர்த்தி! வீட்டுக்கு வர மறுக்கும் ஜீவா? வரப்போகும் டிவிஸ்ட்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நாள்தோறும் ஏகப்பட்ட ட்விஸ்டுகளுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் மீனாவின் தங்கை திருமணத்திற்கு மூர்த்தி குடும்பத்தினர் அனைவரும் மண்டபத்திற்கு வந்துள்ளனர். மேலும் திருமண வேலைகளை பொறுப்பாக இருந்து பார்த்து ஜீவா போன தடவை நிச்சயதார்த்தத்தில் தன் குடும்பத்தாரை ஜனார்த்தனன் அசிங்கப்படுத்தியது போல் இந்த முறை எதுவும் நடக்க கூடாது என ஜீவா பயந்து வருகிறார்.

முகூர்த்த நேரம் நெருங்கிய நிலையில் மீனாவிடம், மாப்பிள்ளை மற்றும் அவர் குடும்பத்தாரை மேடைக்கு வரச் சொல்லுமா என ஜனார்தனன் கூறுகிறார். ஆனால் ஜீவா நினைத்தது போல் இல்லாமல் இந்த ஜனார்த்தனன் மூர்த்தி குடும்பத்தினரை மதிப்பாக நடத்துகிறார். இதன் பிறகு நல்லபடியாக திருமணம் நடந்து முடிகிறது. அதன் பின் 2 மொய் கவர்களை கண்ணனிடம் கொடுத்த மூர்த்தி, செய்முறை செய்து வரும்படி சொல்கிறார்.

மற்றொரு பக்கம் முல்லையிடம் அவரது அம்மா, நீங்க எவ்ளோ மொய் பணம் செய்ய போகிறீர்கள் என கேட்க, அதற்கு அவர் 5000 என சொல்கிறார். இதை விட கொஞ்சம் கூட மொய் செய்யும்படி கூறுகிறார். அதற்கு அவர் வேண்டாம், மூர்த்தி மாமா வேற பெரிய தொகை செய்கிறார். இந்த செய்முறையையே அக்கா மாமாவுக்கு தெரியாமல் தான் செய்கிறேன் என சொல்லிவிடுகிறார்.

அதன் பின், ஜீவா பெயரைத் தவிர்த்து மீதி அனைவரின் பெயரும் மொய் கவரில் இருக்க ஜீவா கொந்தளித்து விடுகிறார். இந்த சீரியலின் இப்படியான காட்சிகளை பார்க்கும் போது இனி மூர்த்தி குடும்பத்தில் ஏகப்பட்ட குழப்பங்கள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தகவலுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்.

Written by