நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா? அதிகாரப்பூர்வமான அறிவிப்பு!

இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘வாத்தி’. இந்த படத்தில் பள்ளிக்கூட ஆசிரியராக நடிகர் தனுஷ் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா, சமுத்திரக்கனி ஆகியோர் நடித்திருந்தனர்.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாக்கப்பட்ட இந்தத் திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியானது. அந்த வகையில், ‘வாத்தி’ திரைப்படம் வெளியாகி சரியாக ஒரு மாதம் கடந்த நிலையில் இந்த படம் குவிந்த வசூல் விவரங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி, ‘வாத்தி’ திரைப்படம் உலகளவில் சுமார் 118 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படமும் 100 கோடியை கடந்து சாதனை நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வரும் தனுஷ், தன்னுடைய சம்பளத்தை இனிமேல் உயர்த்தப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் தகவலுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்.

Written by