விஜய் டிவியில் நான் பிரைம் டைமில் ஆரம்பித்து, இப்போது பிரைம் டைமில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் ஈரமான ரோஜா-வே சீசன் 2. இந்த சீரியல் புரோமோ வெளியான நாளில் இருந்தே மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
ஜீவா-வும், காவ்யாவும் சேர வேண்டும் என்பதில் ஆரம்பித்து, இப்போது காவ்யா-வும், பார்த்திபனும் எப்படி சேரப் போகிறார்கள் என்பது வரை சென்றுக் கொண்டிருக்கிறது. அதிலும் இப்போது திடீரென நான்கு மாதங்களுக்கு பிறகு என்று சொல்லி கதையை நகர்த்தி வருகின்றனர்.
அதனால் சீரியல் முடியப் போகிறதா? என்று ரசிகர்கள் கேட்டு வரும் நிலையில், கடந்த வாரம் சீதா ராமன் சீரியல், இந்த சீரியலை பின்னுக்கு தள்ளி உள்ளது. அதனால் தொடர்ந்து இப்படி டி.ஆர்.பி குறைந்தால், நிச்சயம் சேனல் இந்த சீரியலை முடித்து விடும் என்று தெரிவித்துள்ளனர்.
ஆனால் இன்னும் சில மாதங்களுக்கு சீரியல் தொடரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் டி.ஆர்.பி அதிகமாகவில்லை என்றால் கண்டிப்பாக முடிந்து விடும். அதனால் ஜே கே கேரக்டரை மறுபடியும் சீரியலில் இறக்கவுள்ளனர். மேலும் தகவலுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்.