சமீபத்தில், ஜி தமிழில் ஆரம்பிக்கப்பட்ட சீரியல் தான் சீதா ராமன். ஆரம்பித்த நாள் முதலே பல பேரின் மனதைக் கவர்ந்துள்ளது. நாளுக்கு நாள் அதைப் பார்ப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த சீரியலில் ஹீரோயினாக நடிகை நல்கர் பிரியங்கா நடித்து வருகிறார். அவர் ஏற்கனவே சன் டிவியில் ஒளிப்பரப்பான ரோஜா சீரியல் மூலம் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு ஜோடியாக நடிகர் ஜெய் டிஸோசா நடித்து வருகிறார்.
அது மட்டும் இல்லாமல், இந்த சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில், பிரபல சினிமா நடிகை ராணி முதன் முதலாக, சீரியலுக்கு அறிமுகமாகியிருந்தார். அர்ச்சனா என்ற கதாப்பாத்திரத்தில் நன்றாகவே நடித்து வந்தார். ஆனால் இப்போது அவர் இந்த சீரியலில் இருந்து விலகியுள்ளார்.
அவருக்கு பதிலாக நடிகை ரேகா கிருஷ்ணா நடிக்கவுள்ளார். இவர் சன் டிவியில் ஒளிப்பரப்பான தெய்வமகள் சீரியல் மூலம் எல்லாருக்கும் பிரபலமாகியிருந்தார். இந்த சீரியலில் தற்போது அர்ச்சனா கதாப்பாத்திரத்தில் இனிமேல் இவர் தான் நடிக்கிறார். மேலும் தகவலுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்.