விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு, அது இது எது நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டியெல்லாம் ரீச்சானவர் தான் ரோபோ சங்கர். தற்போது வெள்ளித்திரையில் காமெடியனாக கலக்கி வருகிறார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ரஜினி, விஜய், அஜித், தனுஷ், விக்ரம் ஆகியோர் படங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் அலெக்சாண்டரியன் வகை பச்சை கிளிகளை வளர்த்து சர்ச்சையில் சிக்கினார். சிக்கியது மட்டுமின்றி வனத்துறையினர் அவருக்கு ரூ.2.5 லட்சம் அபராதம் விதித்தனர்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ரோபோ சங்கரின் மனைவி தங்களுக்கு இந்த பணம் ரொம்பவே அதிகம் என கண்ணீர் மல்க பேசினார். இந்த நிலையில் ரோபோ சங்கர் குறித்து வெளியான புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதாவது நடிகர் ரோபோ ஷங்கர் உடல் எடை குறைந்து ஒல்லியாக காணப்படுகிறார். ரசிகர்கள் அப்புகைப்படத்தை பார்த்து வியந்துள்ளனர். படத்துக்காக எடை குறைந்திருக்கிறாரா இல்லை உடல்நிலையில் எதுவும் பிரச்சனையா? என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.