பிரபல சீரியலில் இருந்து விலகிய மெயின் ஹீரோயின்! அவங்களுக்கு பதிலா இவங்க தான்! புது அப்டேட்!

சன் டிவியில் நான் பிரைம் டைமில் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியலில் செவ்வந்தி சீரியலும் ஒன்று. இந்த சீரியலில் ஹீரோயினாக நடிகை திவ்யா ஸ்ரீதர் நடித்து வருகிறார். அவர் ஏற்கனவே சன் டிவியில் ஒளிப்பரப்பான மகராசி சீரியலில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

கடந்த சில மாதங்களாகவே, நாம் அடுத்தடுத்து நடிகை திவ்யா ஸ்ரீதருடைய செய்திகளைப் பார்த்திருப்போம். இப்போது அவர் கர்ப்பமாக இருக்கிறார். அதை சில மாதங்களுக்கு முன்பே, ரசிகர்களிடம் தெரிவித்திருந்தார்.  இப்போது அவருக்கு ஒன்பதாம் மாதம் நடந்துக் கொண்டிருக்கிறது.

சில வாரங்களுக்கு முன்பு தான் சீரியலில் உடன் நடிப்பவர்கள் அனைவரும் சேர்ந்து வளைகாப்பு நடத்தியிருந்தனர். அதைத் தொடர்ந்து இன்னும் சில நாட்களில் அவருக்கு குழந்தைப் பிறக்க போவதால், அவர் சீரியலில் இருந்து தற்காலிகமாக விலகியுள்ளார்.

அதை சரி கட்டுவதறகாக, நடிகை ரம்யா கெளடா-வை புதியதாக மெயின் ரோலாக கொண்டு வர உள்ளனர்.  எப்படியும் இரண்டு, மூன்று மாதங்களுக்கு பின், நடிகை திவ்யா ஸ்ரீதர் மீண்டும் நடிக்க வருவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மேலும் தகவலுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்.

Written by