பீஸ்ட் பட நடிகரின் அடுத்த படத்தில் இணையும் நடிகர் கவின்! வாவ் செம்ம சூப்பர்! குவியும் வாழ்த்துக்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மத்தியில் நன்கு அறியப்பட்டவர் தான் நடிகர் கவின். தற்போது இவர் நடித்த டாடா திரைப்படம் கடந்த மாதம் 10ம் தேதி வெளியாகி பெரிய அளவில் பேசப்பட்டது. வெறும் 11 கோடியில் உருவான இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 50 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

இப்படிப்பட்ட ரசிகர்கள் மட்டுமின்றி பல முக்கிய பிரபலங்களையும் பாராட்டி தள்ளினர். இந்த நிலையில் இவரின் அடுத்த படம் குறித்து சமூக ஊடகங்களில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது விஜய் நடிப்பில் கடந்த வருடம் வெளியான பீஸ்ட் படத்தில் காமெடியனாக நடித்த டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் கவின் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தப் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் என்பவர் தயாரிக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து உலகநாயகன் தயாரிக்கும் படத்தில் கவின் நடிப்பதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது

என்னத்தான் கூறினாலும், இன்றளவும் டாடா படம் ரசிகர்கள் மத்தியில் மட்டும் அல்லாமல், பொதுவான சினிமா ரசிகர்களிடையிலுமே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அடுத்த படமும் இந்த வெற்றியை தக்க வைக்குமா? என்பதைப் பார்க்கலாம். மேலும் தகவலுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்.

Written by