விஜய் டிவியில் மிகவும் பரவலாக பேசப்பட்ட, பார்க்கப்பட்ட, ட்ரோல் செய்யப்பட்ட, இப்படி பல விதமாக சொல்லிக் கொண்டே போகலாம். அப்படி ஒரு சீரியல் தான் பாரதி கண்ணமா சீரியல். கிட்ட தட்ட நான்கு வருடங்களுக்கு மேலாக ஓடிக் கொண்டிருக்கிறது.
எப்போ முடிப்பீங்க? என்று ரசிகர்களையே கேட்க வைத்து, ஒரு வழியாக கிளைமேக்ஸ் காட்சிகளை நோக்கி சீரியல் சென்றுக் கொண்டிருக்கிறது. சீரியல் முடிந்த உடன் சீசன் 2 வருமா? என்று பல பேர் கேட்டு வந்தனர். அதை உறுதி செய்வது போல் இப்போது இயக்குனர் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.
தனது இன்ஸ்டா பக்கத்தில் பாரதி கண்ணமா சீசன் 2 என்ன பண்ணலாம்? என்று ரசிகர்களிடமே கேள்வியை கேட்டிருந்தார். அதைத் தொடர்ந்து ஒரு ஜோடியின் புகைப்படத்தை ப்ளூர் செய்து, யார் இவர்கள் என்று கேட்டுள்ளார்.
பாரதி கண்ணமா சீரியலின் புரோமோ சூட்டில் எடுக்கப்பட்ட புகைப்படமாக இருக்கலாம் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த புகைப்படத்தில் இருப்பவர்களை உங்களால் கண்டுப்பிடிக்க முயன்றால், நீங்கள் கருத்து தெரிவிக்கலாம். சில பேர் சத்யா சீரியல் ஹீரோ விஷ்னுஎன்று கூறியுள்ளனர்.