பிரபல காதல் ஜோடிக்கு குழந்தை பிறந்துள்ளது! என்ன குழந்தை தெரியுமா? குவியும் வாழ்த்துகள்!

சினிமாவில் நடிக்க வேண்டும் என்றாலே கலராகத்தான் இருக்க வேண்டும் என்ற நிலை மாறி இப்போதெல்லாம், நிறம் பேதமின்றி, கதைக்கு முன்னுரிமை கொடுத்து சீரியல், சினிமா எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. அதே போல் காதலுக்கு அழகோ, வயதோ நிச்சயம் தேவையில்லை மனம் இருந்தால் போதும்.

அந்த விஷயத்தை நிரூபித்த நட்சத்திர ஜோடி தான். டைரக்டர் அட்லீ மற்றும் பிரியா. பல ட்ரோல், கலாய்களை சந்தித்திருந்தாலும், இன்று வரை அவர்கள் அதை ஒரு பொருட்டாக கூட நினைக்கவில்லை. கனா கானும் காலங்கள் சீரியல் மூலம் மக்களுக்கு பரிட்சையமானவர் தான் நடிகை பிரியா மோகன்.

ராஜா ராணி என்ற முதல் படத்திலேயே, மக்கள் மத்தியில் பெஸ்ட் டைரக்டர் என்ற பெயரை எடுத்தவர் தான் டைரக்டர் அட்லி. அவர் அசிஸ்டெண்ட் டைரக்டராக இருக்கும் போதே, பிரியா-வும், அட்லியும் காதலித்து வந்தனர். அதன் பின் கடந்த 2014 வது வருடம் திருமணமும் செய்து கொண்டனர்.

 

View this post on Instagram

 

A post shared by Priya Mohan (@priyaatlee)

இந்நிலையில் சமீபத்தில் தான் பிரியா கர்ப்பமாக இருப்பதை சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் பகிர்ந்திருந்தார். அதைத் தொடர்ந்து அவர்களுக்கு இப்போது ஆண் குழந்தைப் பிறந்துள்ளது. அதை “அவர்கள் சொன்னது சரிதான் 😍 இப்படி ஒரு உணர்வு உலகில் இல்லை ♥️ அது போலவே எங்கள் ஆண் குழந்தை இங்கே உள்ளது! பெற்றோரின் புதிய அற்புதமான சாகசம் இன்று தொடங்குகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Written by