சன் டிவியில் ஒளிப்பரப்பான ரோஜா சீரியல் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் தான் நடிகர் சிப்பு சூர்யன். முதல் சீரியலிலேயே தமிழ் பெண் ரசிகைகளின் டீரீம் ஹீரோவாக மாறிப்போனார் என்று தான் சொல்ல வேண்டும். அவருக்காகவே சீரியல் பார்த்தவர்கள் பல பேர்.
அவருக்கு இரண்டு வருடங்களுக்கு முன் தான், பெங்களூரை சேர்ந்த இஞ்சினியர் பெண் ஒருவருடன் திருமணம் முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து ஒரு வருடத்திற்கு முன் அவருக்கு ஆண் குழந்தையும் பிறந்தது.
இது வரை சமூக வலைத்தளத்தில், தன் பர்ஷனல் புகைப்படத்தை பதிவிடாத அவர், முதல் முறையாக குழந்தையுடன் அவரும், அவர் மனைவியும் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். ஆனால் குழந்தையின் முகம் தெரியாதவாறு ஸ்மைலி மூலம் மறைத்துள்ளார்.
அதில் இன்றுடன் அவர் மகன் பிறந்து ஒரு வருடம் ஆகியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து லைவ் மூலம், குழந்தையின் முகத்தையும் முதன் முதலாக காட்டியுள்ளார். மேலும் தகவலுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்.