விஜய் டிவியில் நான் பிரைம் டைம் சீரியலில் பரவலாக பார்க்கம் படும் சீரியல்களில் ஒன்று நம்ம வீட்டுப் பொண்ணு. இந்த சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்கு அறிமுகமானவர்கள் நடிகர் சுர்ஜீத் மற்றும் நடிகை அஷ்வினி. இருவருமே இந்த சீரியலில் புது முகமாகத்தான் அறிமுகமானவர்கள்.
இந்த சீரியல் கிட்ட தட்ட 400 அத்தியாயத்தை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. புது முக நடிகர் மற்றும் நடிகையாக இருந்தாலும், சீரியல் ஆரம்பித்த கொஞ்ச நாளிலேயே தனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்கி வைத்துள்ளனர். அந்த அளவுக்கு இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளது.
இப்போது இந்த சீரியல் விரைவில் முடிவடையப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இன்னும் இந்த சீரியல், ஒரு மாதங்கள் தான் ஓடும் என்றும், ஏற்கனவே கிளைமாக்ஸ் காட்சிகள் சூட்டிங் ஆரம்பிக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
அதனால் இந்த சீரியல் முடிவுக்கு பின், விஜய் டிவியில் புதிதாக ஆரம்பிக்க உள்ள பொன்னி சீரியல் வரப் போவதாக உள்ளது. இந்த இரண்டு சீரியல்களையுமே இயக்குனர் குணசேகரன் இயக்கவிருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. மேலும் தகவலுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்.