ரசிகர்களுக்காக, பிரபல சேனல் எடுத்த அதிரடி முடிவு! பரவாயில்லையே சூப்பர் டிசிசன்! செம்ம குஷியில் ரசிகர்கள்!

விஜய் டிவியில் சீசன் 1 வெற்றியைக் கடந்து மிகவும் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று மெளன ராகம். இப்போது இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே, இருந்தது. ஆனால் சமீபத்தில் இந்த சீரியல் முடிவடையப் போவதாக தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகியிருந்தது.

அப்பா மகள் பாசத்தை மையமாக வைத்து விஜய் டிவி மௌன ராகம் சீரியல் எடுக்கப்பட்டது. அப்பா இல்லாமல் வளரும் பெண் தன்னுடைய அப்பாவை கண்டுபிடித்து சேர முடியாமல் போனது எல்லாம் முதலில் சீசனில் காட்டப்பட்டது. அதன் பின் மக்களின் ஆதரவைப் பார்த்து மௌன ராகம் இரண்டாவது சீசன் தொடங்கப்பட்டது.

அதில் பழைய கதையை முதன்மையாக வைத்திருந்தாலும், அதில் கூடுதல் கதை சேர்க்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. பல திருப்பங்களுடன் காதல் காட்சிகளும் வைக்கப்பட்டு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வருவதாக செய்தி ஒன்று வெளியானது. மேலும் டி. ஆர். பி யிலும் இந்த சீரியல் சற்று சரிவை சந்தித்தது.

ஆனால் கடந்த சில நாட்களாக பல விறுவிறுப்பான காட்சிகள் காட்டப்பட்டதால் இந்த சீரியலின் டி ஆர் பி தற்போது நல்ல ரேட்டிங்கை பெற்றுள்ளது. எனவே ரசிகர்கள் கொடுத்த ஆதரவால் 3 முதல் 6 மாத சீரியலின் கதை சேனல் நிர்வாகம் நீடித்துள்ளது. இதன் மூலம் இந்த சீரியல் தற்போது முடிவுக்கு வர போவதில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதனால் விஜய் டிவி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மேலும் தகவலுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்.

Written by