ஹீரோயினுக்காக, சீரியலின் கதையையே மாற்றிய பிரபல சீரியல் டீம்! உண்மையாவே செம்மப்பா! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

சன் டிவியில் மிகப் பிரபலமாக பல சீரியல்கள் ஓடிக் கொண்டிருக்கிறது. அதில் முக்கியமான ஒரு சீரியல் செவ்வந்தி. என்னத்தான் பிரைம் டைம் சீரியலுக்கென்று தனி ரசிகர்கள் கூட்டம் இருந்தாலும், ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை இல்லத்தரசிகளுக்கான நேரம் நான் பிரைம் டைம் தான்.

அந்த வரிசையில் செவ்வந்தி சீரியலுக்கென்று தனி ரசிகர் கூட்டம் உள்ளது. இதில் கதாநாயகியாக, நடிகை திவ்யா ஸ்ரீதர் நடித்து வருகிறார். இதற்கு முன் அதே சேனலில் மகாராசி என்ற சீரியலில் நடித்து வந்தார். அவர் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் செல்லம்மா சீரியல் நடிகர் அர்னவ்வை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

தற்போது அவர் கர்ப்பமாக இருப்பதையும் ரசிகர்களுடன் தெரிவித்திருந்தனர். ஆனால், இருவருக்கும் இடையே ஏதோ கருத்து வேறுபாடு இருப்பதால், இப்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். என்னதான், கணவன் கைவிட்டு சென்று விட்டாலும், அவருடன் நடித்த துணை நடிகர்கள் அனைவரும் சேர்ந்து, அவருக்கு வளைக்காப்பு செய்து வைத்தனர்.

இந்நிலையில், அவர் செவ்வந்தியில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். கர்ப்பமாக இருப்பதால், இன்னும் எத்தனை நாளைக்கு தொடர்ந்து அவர் நடிப்பார் என்று அனைவரும் கேட்டு வந்திருந்தனர். அதற்கு பதில் அளிக்கும் விதமாக, சீரியலிலேயே, அவர் கர்ப்பமாக இருப்பது போல் கதையை மாற்றியுள்ளனர். அதைப் பார்த்த அவரின் ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.

ஹீரோயினுக்காக, சீரியல் கதையையே மாற்றியிருப்பது பெரிய விஷயம். மேலும் தகவலுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்.

Written by