இனிமேல் இவர் தமிழ் சீரியலுக்கு வரமாட்டாரா? அதனால் சீரியலை விட்டு விலகுகிறாரா? சோக த்தில் ரசிகர்கள்!

சின்னத்திரையில் ஏகப்பட்ட ரசிகர்களை கொண்ட விஜய் டிவியில் பல சீரியல்கள் புதுமையான கதையுடன் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் இரண்டு சீசன்களாக மக்களின் மனம் கவர்ந்த சீரியல்களில் ஒன்றாக இருப்பது தான் மௌன ராகம் சீரியல்.

இந்த சீரியலில் அப்பாவை பிரிந்த சிறு குழந்தையின் கதை முதல் சீசனில் எடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இரண்டாவது சீசனில் அந்த சிறு பெண் தற்போது வளர்ந்து கல்யாணம் முடிந்து அதனால் ஏற்படும் கஷ்டங்கள் காத்திருக்கின்றன. அந்த வகையில் இரண்டாவது சீசனில் சக்தி கதாபாத்திரத்தில் நடிகை ரவீனா நடித்து வருகிறார்.

அவருக்கு ஜோடியாக வருண் கதாபாத்திரத்தில் நடிகர் சல்மான் நடித்து வருகிறார். பல டிவிஸ்ட்களுடன் ஒளிபரப்பாகி வரும் அந்த சீரியலில் யாரும் எதிர்பாராத விதத்தில் புது டிவிஸ்ட் நடக்க இருக்கிறது. அதாவது நடிகர் சல்மான் சீரியலை விட்டு விலகி இருப்பதாகவும், அவர் மலையாளம் சீரியலில் கமிட்டாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், இந்த நேரத்தில் மௌன ராகம் 2 சீரியல் விரைவில் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இனிமேல் இவர் மீண்டும் ஒரு தமிழ் சீரியலில் நடிக்க மாட்டாரா என்ற கேள்வியும் ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது. மேலும் தகவலுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்.

Written by