முடிவை நோக்கி நகர்கிறதா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்? அடுத்தடுத்த அதிரடி திருப்பங்கள்! குழப்பத்தில் ரசிகர்கள்!

விஜய் டிவியில் மிகப் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். சில மாதங்களுக்கு முன்னதாகவே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் 1000 எபிசோடுகளை கடந்து வெற்றிப்பாதையில் மைல்கல்லை தொட்டது. இதேபோல், இன்னும் பல எபிசோடுகளை இந்த சீரியல் கடக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், விரைவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


மேலும், சீரியல் முடிவதற்குள் அடுத்தடுத்து பல அதிரடி திருப்பங்கள் உள்ளன. அதாவது, பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையை நடத்துவதில் சிக்கல்கள் உள்ளன. அதை மீறி இவர்கள் எப்படி பிரச்சனையை சமாளித்து வெற்றி பெறுகின்றனர் என்பது அடுத்து வரும் கதைக்களமாக இருக்கும். மேலும் குழந்தை பெறுவதற்கு சிகிச்சை எல்லாம் வேண்டாம் என கூறும் முல்லைக்கு குழந்தை பிறக்குமா என்ற டிவிஸ்டும் அடுத்து இந்த சீரியலில் வர இருக்கிறது.

அது மட்டும் இல்லாமல், மீனா-வின் தங்கைக்கும், பிரசாந்துக்கும் இடையிலான கல்யாண ட்ராக்கும் வர விருக்கிறது. சீரியல் முடியப் போகிறது எந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாவிட்டாலும், முடிவுக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது

சமீப காலமாக சின்னத்திரையில் பல முக்கிய தொடர்கள் அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரும் முடிய இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தகவலுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்.

Written by