குட் நியூஸை சொன்ன பிரபல காதல் ஜோடி! என்ன விஷேசம் தெரியும்? குவியும் வாழ்த்துகள்!

தமிழ் சின்னத்திரையில்  பல சீரியல்களில் நடித்து மக்களிடம் பிரபலமானவர் வைஷாலி தனிகா.  விஜய் டிவியில் ஒளிப்பரப்பான மாப்பிள்ளை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானார். அதன் பின் ராஜா ராணி சீசன் 1-ல் ஹீரோவின் தங்கையாக நடித்திருந்தார்.அவர் தனது காதல் கணவரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர் இதற்கு முன்னதாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணனுக்கு ஜோடியாக முதன்முதலில் நடித்திருந்தார்.  அதன் பின் அவர் அந்த சீரியலை விட்டு விலகினார். அதன் பின் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கோகுலத்தில் சீதை, நம்ம வீட்டு பொண்ணு போன்ற சீரியல்களில் நடித்திருந்தார்.

இந்நிலையில் அவர் தனது கணவர் தேவ் உடன் இணைந்து மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் இருவரும் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்கள்.  அது என்ன விசேஷம் என ரசிகர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

அதற்கு அவர்கள் இருவரும் இணைந்து ஜிம் ஒன்றை துவக்கி இருப்பதாகவும், அதன் திறப்பு விழா புகைப்படங்கள் தான் இவை என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதனால் இந்த காதல் ஜோடி வாழ்க்கையில் மேலும் வளர வேண்டும் என ரசிகர்களும் நண்பர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் தகவலுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்.

Written by