கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் வரும் குழந்தை யார் மகள் தெரியுமா? அதுவும் இந்த பிரபல நடிகரின் மகளா? நம்பவே முடியல.. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் மாதவன் நடிகை சிம்ரன் நடித்து வெளியான திரைப்படம் தான் கன்னத்தில் முத்தமிட்டால். இந்த படத்தில் மகளாக அமுதா என்ற குழந்தை நடித்திருப்பார். அந்த குழந்தை யார் தெரியுமா இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் மகள் கீர்த்தனா தான் அந்தப் பெண்.

அந்தப் படத்தில் நடித்ததற்காக கீர்த்தனாவுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரமாக தேசிய விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், கதை ஆசிரியர் என பன்முக திறமைகளுடன் வலம் வருபவர் பார்த்திபன்.

கடந்த வருடத்தில், இவர் இயக்கி நடித்த ஒத்த செருப்பு படம் மக்கள் மனதை வென்று ஹிட் அடித்தது. மேலும் புதிய பாதை படத்தின் மூலம் இயக்குனராகவும், நடிகராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் இந்த பார்த்திபன். அந்தப் படத்தின் நாயகியாக நடித்தவர் சீதா.

முதல் படத்திலேயே இருவருக்கும் காதல் ஏற்பட்டு, அது கல்யாணத்தில் நல்ல படியாக முடிந்தது. இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்த இவர்கள் ஒரு ஆண் குழந்தையையும் தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.

மேலும் கீர்த்தனா வளர்ந்த பிறகு கதாநாயகியாக நடிக்க வாய்ப்புகள் வந்த போது அவரை நான் கேமராவுக்கு முன் நடிக்க விருப்பபடவில்லை அதனால் பின்னே இருக்கத் தான் ஆசை என்று தெரிவித்துள்ளார்.

அதன் பிறகு மணிரத்னம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் பார்த்திபன் மகள் கீர்த்தனாவுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது…

Written by