பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து வரப்போகும் டிவிஸ்ட்! வெளியான தகவல்! பாக்கியா-க்கு என்னாச்சி?! அ தி ர் ச் சியில் ரசிகர்கள்

பாக்கியலட்சுமி சீரியலில் பல திருப்பங்கள் வர இருக்கிறது. கோபியின் இரண்டாவது திருமணத்தை பற்றி தெரிந்து கொண்ட ராமமூர்த்தி அதை தட்டி கேட்க சென்று மாடியில் இருந்து தவறி விழுகிறார். அதனால் அவருக்கு பேசமுடியாமல் போகிறது. இதை சாதகமாக பயன்படுத்தி கோபி பாக்கியாவை விவாகரத்து செய்ய நினைக்கிறார்.

முதலில் அலுவலக பத்திரம் என சொல்லி கையெழுத்து வாங்கி பின் கோர்ட் வரை அழைத்து சென்று எல்லா வேலைகளையும் செய்கிறார். அதெல்லாம் தெரியாமல் பாக்கியா கோபியை நம்புகிறார். இந்நிலையில் வீட்டில் தாத்தாவின் மருத்துவ செலவால் அடிக்கடி பிரச்சனைகள் வருகிறது. ஜெனி அவரது அப்பாவிடம் பணம் கேட்க அந்த விஷயம் தெரிந்து செழியன் கோபப்படுகிறார். அம்மா தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம் என சொல்ல, எழில் செழியனை அடிக்க போக அதை பார்த்து கோபி கோபப்படுகிறார்.

உன்னுடைய செலவிற்கு நீ பணம் வாங்குவதால் தான் எல்லாம் நடக்கிறது என கோபி பாக்கியாவை சத்தம் போட, அதை எல்லாம் கேட்டு ஈஸ்வரி ஊருக்கு போகலாம் என சொல்கிறார். அதனால் குடும்பத்தில் பல பிரச்சனைகளை பாக்கியா எதிர் கொள்கிறார். இதனால் பெரிய மனஉளைச்சலில் இருக்கும் பாக்கியாவிற்கு கோபி விவாகரத்து செய்ய நினைப்பது தெரிய வருகிறது.

அதனால் கோபியை நம்பியதால் தன் வாழ்க்கை முடிந்ததாக நினைத்து பாக்கியா வருத்தப்பட்டு தற்கொலைக்கு முயற்சி செய்ய போகிறார். ஆனால் எழில் அதை பார்த்து அம்மாவை காப்பாற்றுகிறார். எழில் உனக்கு நான் இருக்கிறேன் என தைரியம் சொல்ல பாக்கியா மீண்டும் தன்னுடைய வாழ்க்கையில் போராட தொடங்குகிறார்

Written by