ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் வீட்டில் நடந்த கோலாகலமான விசேசம்! வெளியான புகைப்படம் வைரல்!

விஜய் டிவியின் ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ஆல்யா மானசா. சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இவர், ராஜா ராணி சீரியலில் தன்னுடன் நடித்த நடிகர் சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஏற்கவே அய்லா என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், ஆல்யா மானசா தற்போது விஜய் டிவியில் ராஜா ராணி சீசன் 2 சீரியலிலும், சஞ்சீவ் சன் டிவியின் கயல் சீரியலில் நடித்து வரும் நிலையில், சமீபத்தில் ஆல்யா தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ஆல்யாவுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் ஆல்யா கர்ப்பமாக இருப்பதால், இனி அவர் ராஜா ராணி சீரியலில் நடிக்க மாட்டார் என்று தகவல் முன்னதாக வெளியானது. இந்த தகவலுக்கு ஆல்யா எந்த பதிலும் அறிக்காத நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் மத்தியில் உரையாடிய அவர், இதற்கு பதில் அளித்துள்ளார். அதில், எந்த சீரியலில் இருந்தும் நான் விலகவில்லை சந்தியா என்பது ஒருவர் மட்டுமே. அது நான் மட்டும் தான் என்று கூறினார்.

இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ஆல்யா தொடர்ந்து சீரியலில் நடித்து வருகிறார். ஆல்யா தனது இரண்டாவது டெலிவரி நாள் மார்ச் 24-ந் தேதி கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதேபோல் மார்ச் 20-ந் தேதி ஆல்யா- சஞ்சீவ் முதல் குழந்தைஅய்லாவிற்க்கு பிறந்தநாள் என்பதால், ஆல்யாவின் 9-வது மாத வளைகாப்பு மற்றும் அய்லாவின் பிறந்தநாள் இரண்டையும் ஒன்றாக கொண்டாட உள்ளதாக சஞ்சீவ் தயாராகி வருகிறார்.

இந்த விழாவிற்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் சக நடிகர்கள் பலருக்கு சஞ்சீவ் அழைப்பு விடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் சில தினங்களுக்கு முன்பு ஆல்யா தமக்கு ஆண் குழந்தை பிறந்தால், அர்ஷ் என்றும் பெண் குழந்தை பிறந்தால் லைலா என்றும் பெயர் வைக்க யோசித்து உள்ளதாக கூறினார்.

Written by