குக் வித் கோமாளியில் கெஸ்டாக வந்த பிரபல நடிகை மற்றும் நடிகர்! வெளியான புரோமோ வைரல்!

குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி தொடங்கப்பட்டு ஒரு சில வாரங்களே ஆன நிலையில் கடந்த சீசன்களை போல இந்த சீசனும் மாபெரும் வெற்றி அடைய போகிறது என்பதில் சந்தேகமில்லை. அந்த வகையில் போட்டியாளர்களும், கோமாளிகளும் தங்களுடைய முழு பங்களிப்பையும் கொடுத்து இருக்கின்றனர். இந்நிலையில் இந்த சீசனில் புகழ் வர வேண்டும் என மக்களின் கோரிக்கையின் படி, ஒரு சில சீசன்களில் அவர் வந்து இருக்கிறார்.

அதனால் அவர் வரும் எபிசோடுகள் மட்டுமில்லாமல் எல்லா எபிசோடுகளுமே மக்கள் மத்தியில் அதிகம் பேசப்படுகிறது. இந்நிலையில் இந்த வார எபிசோட் குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் நடிகர் துல்கர் சல்மான் வர இருக்கிறார். ஷிவாங்கி உடன் இணைந்து அவர் நடித்த படத்தில் இருந்து காதல் காட்சிகளை நடித்து காட்டுகிறார்.

பின் வண்டியில் ஏற்றிக் கொண்டு அவர் கிளம்ப மிகவும் அருமையாக இருக்கிறது, மேலும் அந்த படத்தின் கதாநாயகியும் வந்து சமைத்து இருக்கிறார். அதனால் இந்த எபிசோட் மாஸாக இருக்க போகிறது என்பதில் சந்தேகம் இல்லை ஆனாலும் சென்ற வாரமும் புகழ் வரவில்லை என ரசிகர்கள் வருத்தத்தில் இருந்த நிலையில், இந்த வாரமும் புகழ் இல்லை என்பது தெரிய வருகிறது.

அதனால் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கின்றனர். இருந்தாலும் மற்ற கோமாளிகள் புகழ் இடத்தை நிரப்புவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த ப்ரோமோ தற்போது ட்ரெண்டாகி இருக்கிறது. மேலும் துல்கர் சல்மான் எண்ட்ரியால் இளம் ரசிகைகள் உற்சாகத்தில் இருக்கின்றனர். மேலும் தகவல்களுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்.

Written by