பாவனி-க்கும், அமீருக்கும் எப்போது திருமணம்? ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு, பாவனி அளித்த நேரடி பதில்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் மூலமாகவே பாவனியும், அமீரும் சந்தித்து கொண்டனர். அமீர் 50 ஆவது நாளில் வைல்ட் கார்டு எண்ட்ரியாக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த நாளில் இருந்தே அமீர் பாவனியுடன் மட்டுமே நேரத்தை செலவிட்டு வந்தார். பிக் பாஸ் வீட்டில் இறுதி வாரம் வரை பாவனியும், அமீரும் தாக்குபிடித்தனர்.

இருவரும் தனியாக அடிக்கடி பேசி வருவதால் பல கிசுகிசுக்கள் வந்துகொண்டிருந்தன. இந்த நிலையில் பாவனிக்கு அமீர் முத்தம் கொடுத்தது மேலும் கிசுகிசுவை அதிகப்படுத்தியது. பிக் பாஸ் வீட்டை விட்டு அமீர் மற்றும் பாவனி வெளியேறிய பிறகும் இருவரும் எங்கு சென்றாலும் சேர்ந்தே சென்று வந்தனர். இதனால் இருவரும் காதலித்து வருகிறார்கள் என மக்களின் மத்தியில் அதிகமாக பேசப்பட்டு வந்தது.

இந்த வதந்திகள் குறித்து பாவனி மற்றும் அமீர் இருவரும் எந்தவிதமான கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை. இதனால் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்காமல் இருவரும் காதலித்து வருவதாக மேலும் மேலும் வதந்திகள் பரவ தொடங்கியது. தற்போது பாவனி மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் விருந்தினராக கலந்துகொண்டார்.

பெண்கள் யாரையும் சார்ந்து வாழ கூடாது, பெண்கள் எப்போது தைரியமாக இருக்க வேண்டும், திருமணம் செய்த பெண்கள் கணவரை எதிர்ப்பார்க்காமல் தனியாக தன்னை பார்த்துக் கொள்ள வேண்டும் என பல கருத்துக்களை கூறினார்.  அப்போது பாவனியிடம் நீங்கள் எப்போது அமீரை திருமணம் செய்ய போகிறீர்கள் என கேட்கப்பட்டது. அதற்கு பாவனி எனக்கு வீட்டில் மாப்பிளை பார்த்து கொண்டிருக்கிறார்கள். நானும் அமீரும் சிறந்த நண்பர்கள், நீங்கள் நினைப்பது போல எதுவும் கிடையாது என வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Written by