கயல் சீரியல் ஹீரோயின் மற்றும் ஹீரோ-க்கு இவ்வளவு சம்பளமா? வெளியான தகவல்! வைரல் பதிவு!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மிக பெரிய அளவில் மக்களின் ஆதரவை பெற்ற சீரியல் என்றால் அது கயல் சீரியல் தான். இந்த சீரியல் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. சைத்ரா ரெட்டி, சஞ்சீவ் ஆகியோர் கதாநாயகர்களாக நடித்து வருகின்றனர். மேலும், கோபி, ஐஸ்வர்யா மற்றும் முத்துராமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

தந்தையை இழந்து குடும்ப சுமை அனைத்தையும் தலை மேல் ஏற்றி கொண்டு வாடும் ஒரு பெண்ணாக கயல் கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக டிஆர்பியிலும் கயல் சீரியல் தான் முன்னிலையில் இருந்து வருகிறது. வெள்ளித்திரை சீரியல் நடிகர் மற்றும் நடிகைகளை காட்டிலும் சீரியல் நடிகர் மற்றும் நடிகைகளுக்கு எக்கச்சக்கமான ரசிகர் கூட்டங்கள் இருக்கிறது.

தற்போது தான் கயல் சீரியல் குழுவினர்கள் 100 ஆவது நாள் கொண்டாட்டத்தை நிகழ்த்தினர். தற்போது கயல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் சைத்ரா ரெட்டி, சஞ்சீவ், கோபி, ஐஸ்வர்யா மற்றும் முத்துராமன் ஆகியோர் நாள் ஒன்றுக்கு எவ்வளவு சம்பளம் வழங்கலாம் என்பது குறித்தான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கயல் கதாபாத்திரத்தில் நடித்துவரும் சைத்ரா ரெட்டி நாள் ஒன்றிற்கு ரூபாய் 25,000 சம்பளம் வாங்கி கொண்டிருக்கிறார்.

எழில் கதாபாத்திரத்தில் நடித்துவரும் சஞ்சீவ் 20,000 ரூபாய் சம்பளமும், விக்னேஷ் கதாபாத்திரத்தில் நடித்து வரும் கோபி 10,000 ரூபாய் சம்பளமும், தேவி கதாபாத்திரத்தில் நடித்துவரும் ஐஸ்வர்யா 8,000 ரூபாய் சம்பளமும், தர்மலிங்கம் கதாபாத்திரத்தில் நடித்துவரும் முத்துராமன் 15,000 ரூபாய் சம்பளமும் மற்றும் மற்ற நடிகர் நடிகைகளுக்கு 15,000 வரை சம்பளம் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு சம்பளமா என அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Written by