சீரியலை விட்டு விலகியதற்கு பின் முதன் முதலாக ஆர்யன் வெளியிட்ட பதிவு! ஷா க் கான ரசிகர்கள்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்துமே மக்களின் மத்தியில் பிரபலமாகி வருகிறது. அந்த வகையில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடர் மக்களால் அதிகமாக விரும்பி பார்க்கப்படுகிறது. தன்னை மட்டுமே உலகம் என்று நம்பி வாழ்ந்து கொண்டிருந்த பாக்கியாவை விவாகரத்து செய்ய கோபி துணிந்துவிட்டார்.

பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை இரண்டாம் திருமணம் செய்துகொள்ள கோபி தயாராகி வருகிறார். இந்நிலையில் பாக்கியாவிற்கு தெரியாமலேயே பாக்கியாவிடம் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கிவிடுகிறார். இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜராக கூறி நீதிமன்றத்தில் இருந்து பாக்கியா வீட்டிற்கே நோட்டீஸ் வந்துள்ளது. ஏதேதோ பொய் கூறிவிட்டு பாக்கியாவை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்கிறார்.

நீதிமன்றத்தில் என்ன நடக்கிறது எதற்காக வந்திருக்கிறோம் என எதுவுமே தெரியாமல் பாக்கியா முழித்து கொண்டிருக்கிறார். அதன் பின்னர் அனைவரும் விவாகரத்துக்காக வந்திருப்பதை தெரிந்து கொண்டு கவலை கொள்கிறாள். மற்றவர்கள் விவாகரத்து பெறுவதையே தாங்கி கொள்ள முடியாத பாக்கியாவால் இவரது விவாகரத்தை எவ்வாறு பொறுத்துக்கொள்ள போகிறாள் என அனைவரும் சிந்தித்து கொண்டிருக்கின்றனர்.

இப்படி சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில் பாக்கிய லட்சுமி தொடரில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஆர்யன் சீரியலை விட்டு விலகியுள்ளார். ஆர்யனுக்கு பதிலாக ராஜ பார்வை , நீலி, தெய்வமகள், முள்ளும் மலரும், பொண்ணுக்கு தங்க மனசு மற்றும் பல சீரியல்களில் நடித்து வந்த விகாஸ் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

சீரியலில் இருந்து விலகியது குறித்து தற்போது ஆர்யன் ஒரு பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதாவது இந்த சீரியலில் செழியன் கதாபாத்திரத்திற்கு நீங்கள் கொடுத்த ஆதரவுக்கு மிக்க நன்றி. தற்போது புதிதாக செழியன் கதாபாத்திரத்திற்கு தேர்வாகியுள்ள விகாசிற்கும் நீங்கள் தொடர்ந்து உங்களது ஆதரவை கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்

Written by