விஜய் டிவி மைனா-வை திட்டிய அவர் கணவன்! காரணம் இது தான்! வைரல் வீடியோ உள்ளே!

தமிழ் சின்னத்திரையில் பல பிரபலமானவர்கள் இருக்கின்றனர். சீரியலில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தாலும் அது காலந்தோறும் பேசப்படும் அளவிற்கு இருக்க வேண்டும். அந்த வகையில் சரவணன் மீனாட்சி சீரியலில் மைனா கதாபாத்திரத்தில் நடித்தவர் நந்தினி. இவர் வாழ்க்கையில் பல துன்பங்கள் இருந்தாலும் அதை எல்லாம் எதிர்கொண்டு சின்னத்திரையில் இன்னும் பிரபலமாக இருக்கிறார்.

அவர் முதல் திருமணம் முடிந்து கணவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அதில் இருந்து மீண்டு தன்னை புரிந்து கொண்ட ஒருவரான யோகேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த அழகான ஜோடிக்கு துருவன் என்ற மகன் இருக்கிறான். மைனா விங்ஸ் என்ற யூடுப் சேனல் ஒன்றை அவர் நடத்தி வரும் நிலையில் அதில் காமெடி கன்டென்ட் அடங்கிய பல வீடியோக்களை பதிவிடுவார்கள்.

ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் காமெடி செய்வதில் வல்லவர்கள். மேலும் இவர் விஜய் டிவி Mr and Mrs சின்னத்திரை ரியலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தை பிடித்தார். அதன் பின் ஏகப்பட்ட ரசிகர்கள் இந்த ஜோடிக்கு வந்தனர். இதுவரை நடிப்பு காமெடி என்று மட்டுமே இருந்த மைனா தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் ஆங்கராக களமிறங்கி கலக்கி வருகிறார்.

இந்நிலையில் இந்த அழகான ஜோடியை விஜே அர்ச்சனா பேட்டி எடுத்த வீடியோ ஒன்று ட்ரெண்டாகி இருக்கிறது. அதில் மைனா நந்தினி எதோ கேட்க உடனே கோவப்பட்ட யோகேஷ் ஏண்டி அறிவு இல்லையா என சத்தம் போடுகிறார். அதை பார்த்து அர்ச்சனா அதிர்ச்சி அடைந்தாலும் அதெல்லாம் விளையாட்டிற்கு என்பது போல அடுத்து கேள்விக்கு நகர்ந்து இருக்கின்றனர். இந்த வீடியோ தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

Written by