தன் அம்மா-விற்காக, செழியனை அடிக்கும் எழில்! வெளியான அதிர டி யான புரோமோ! அடுத்த வார டிவிஸ்ட் இது தான்!

பாக்கியலட்சுமி சீரியலில் சென்ற வாரம் முதல் கோபியின் அதிரடி திட்டங்களை பற்றியே எபிசோடுகள் இருந்தது. பாக்கியா கோபி மீது கண்மூடித்தனமாக நம்பிக்கை வைக்க அதை சாதகமாக பயன்படுத்தி கோபி விவாகரத்து வாங்க நினைக்கிறார். முதலில் பத்திரத்தில் கையெழுத்து வாங்க அடுத்ததாக கோர்ட்டிற்கு நேரடியாக அழைத்து செல்கிறார். அங்கே நீதிபதி திருமண வாழ்க்கை பற்றி கேள்வி கேட்க அதெற்கெல்லாம் பாக்கியா ஒரு வித குழப்பத்துடன் பதில் சொல்கிறார்.

கோபி மாட்டிக் கொள்வோமோ என்ற பயத்தில் இருக்க இந்த முறையும் மாட்டிக் கொள்ளவில்லை. முதல் தடவை எல்லாம் நல்லபடியாக முடிந்துவிடுகிறது. இந்நிலையில் அடுத்த வார எபிசோட் குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பாக்கியாவிற்கு பண தேவை அதிகமாக இருக்க வீட்டில் சண்டைகள் வருகிறது.

ஜெனி செழியனிடம் கேட்க ஆனால் செழியன் வீட்டு செலவுகளை பாரமாக நினைக்கிறார். தற்போது செழியனை ஜெனியின் அப்பா தனியாக சந்திக்கிறார். அவர் வீட்டில் பணத் தேவைகள் இருப்பதால் ஒரு லட்சம் வைத்துக் கொள்ளுங்கள் என சொல்கிறார். செழியன் அதை வாங்கி கொண்டு ஜெனியிடம் வந்து சொல்கிறார். ஜெனி நான் தான் கேட்டேன் என சொல்ல, கோவப்பட்ட செழியன் பாக்கியாவிடம் சண்டை போடுகிறார்.

உங்களால் தான் குடும்பத்தில் இவ்வளவு சண்டை என சொல்ல, அம்மாவை பேசுவதை பார்த்து எழில் செழியனிடம் சண்டைக்கு வருகிறார். அப்போது கோபி வந்து பார்த்து இருவரையும் சமாதானம் செய்கிறார். வீட்டில் அடிக்கடி நடக்கும் பிரச்சனைகளை பார்த்து ஈஸ்வரி நாங்க ஊருக்கே போகிறோம் என சொல்கிறார். பாக்கியா நீங்க நல்லா இருக்கும் போது எங்களை பார்த்துக் கொண்டீர்கள் நாங்க இப்போ உங்களை பார்த்துக் கொள்ள வேண்டும் என பாக்கியா வருத்தப்பட்டு பேசுகிறார்.

Written by