குக் வித் கோமாளி யில் இருந்து விலகுகிறாரா மணிமேகலை! அவரே வெளியிட்ட அறிக்கை! வைரல் பதிவு!

விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி சீசன் 2 ஐ தொடர்ந்து தற்போது சீசன் 3 கடந்த ஒரு மாதங்களாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. சீசன் 2 நிகழ்ச்சியை போலவே சீசன் 3யிலும் புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, சக்தி மற்றும் சூப்பர் சிங்கர் பரத் தான் கோமாளிகளாக பங்கு பெற்று வருகின்றனர். இந்த கோமாளிகள் மாற்றி மாற்றி அடிக்கும் லூட்டிகளை மக்கள் பார்த்து வயிறு குலுங்க சிரித்து வருகின்றனர்.

இதிலும் சிவாங்கி மற்றும் புகழுக்கு எக்கச்சக்க ரசிகர் கூட்டங்கள் இருக்கின்றனர். இவர்களை விட தற்போது நாளுக்கு நாள் மணிமேகலைக்கு தான் ரசிகர் கூட்டங்கள் அதிகரித்து கொண்டிருக்கின்றனர். டாக்டர் திரைப்படத்தில் இருந்து மணிமேகலை போட்ட ரெடின் கெட்டப் மக்களை வெகுவாக கவர்ந்தது. ஒவ்வொரு வாரமும் புதுவிதமான கெட்டப்பில் மக்களை மகிழ்வித்து வருகிறார்.

பொதுவாகவே மணிமேகலை எந்த கெட்டப் போட்டாலும் அந்த கெட்டப்பிலேயே ஒன்றி இணைந்து விடுவார். இந்த வாரம் நாட்டாமை திரைப்பட கெட்டப்பை போட்டு கொண்டு நாட்டாமை வசனங்களை அப்படியே பேசி மக்களை குலுங்க குலுங்க சிரிக்க வைக்க போகிறார். இவர் போகும் பொது போறாளே பொன்னுத்தாயி என்கிற பாட்டை எடிட்டிங் குழுவினர் போடுகின்றனர். அதற்கு மணிமேகலை என்னை துரத்துவத்திலேயே குறியாக இருப்பதாக கூறி சண்டை போடுகிறார்.

நீங்கள் எவ்வளவு துரத்தினாலும் நான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை விட்டு செல்ல மாட்டேன் என கூறி அனைவரையும் சிரிக்க வைக்கிறார். இதனை மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து அவரும் மக்களோடு மக்களாக சேர்ந்து மகிழ்ந்துள்ளார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் உள்ள மற்ற கோமாளிகளை காட்டிலும் மணிமேகலை தான் அனைவரையும் சிரிக்க வைத்து கொண்டிருக்கிறார்.

Written by