பாண்டியன் ஸ்டோர்ஸ், சீரியலில் வெளியான தீபிகா-வின் தற்போதைய நிலை! வெளியான தகவல்! சோகத்தில் ரசிகர்கள்!

விஜய் டிவி-யில் ஒளிப்பரப்பாகும் சீரியலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும் முக்கிய பங்கு வகிக்கிறது.. அதில்.. நடிகர் ஸ்டாலின், சுசித்ரா, வெங்கட், குமரன், காவியா, ஹேமா, என்று பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துவருகின்றனர்.

சீரியலின் கதை என்று பார்த்தால், ஆனந்தம் படத்தின் மினி வெர்ஷன் என்றுக்கூட சொல்லாம்.. அண்ணன், அண்ணி! அவர்கள் ஒரு மளிகை கடை வைத்துள்ளார்கள், நாலு ஆண்கள் வீட்டில் இருக்கும் நிலையில் அண்ணி தான் இந்த குடும்பத்தை பிடித்து வைக்கிறார்.

அதன் பின் அவர்களின் தம்பிகளுக்கு திருமணம் நடக்கிறது.. அதில் ஜீவா மீனா என்ற டாம் அன்ர் ஜெர்ரி ஜோடியும் , கதிர் முல்லை என்ற காதல் ஜோடிகளுக்கென்று தனிரசிகர் பட்டாள்மே உள்ளது.. இவர்களின் கலாட்டாக்களுக்கு நடுவில் கடைக்குட்டி தம்பி-யும் உள்ளான்.

அவன் முதலில் மீனா-வின் தங்கை யை காதலித்தான், அதன் பின் அவனின் மாமா பொண்ணை காதலித்தான்.. கண்ணன் கதாப்பாத்திரத்தில் நடிகர் சரவணன் விக்ரம் நடிக்கிறார்.. அவருக்கு ஜோடியாக, முதலில் விஜே தீபிகா அவர்கள் நடித்திருந்தார்.

ஆனால் சில காரணங்களினால், அவருக்கு பதிலாக, சாய் காயத்ரி நடித்து வருகிறார்.. இந்நிலையில் நம் கடைக்குட்டி கண்ணனும், விஜே தீபிகா-வும் இணைந்து ஒரு யூடியூப் சேனல் ஒன்று நடத்தி வருகின்றனர். அது போக எங்கு சென்றாலும், ஒன்றாகத்தான் சென்று வருகிறார்கள்.. தற்போது கூட கோவை க்கு சென்றுள்ளனர்.. அங்கிருந்து அவர்கள் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாப் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

இது குறித்து பேசிய தீபிகா, சீரியலில் இருந்து விலகப் போகிறேன் என்று தெரிந்ததுமே நான் ரொம்ப உடைந்து விட்டேன். எனக்கென்று சில பொறுப்புகள் இருக்கு. என்னுடைய அப்பா அம்மாவை கவனிக்கணும். கடன் பிரச்சனைகளை தீர்க்கவும் எனக்கு வேலை ரொம்பவே முக்கியம்.

 அது இல்லை என்ற போது ரொம்பவே கஷ்டப்பட்டேன். ஆனால், அந்த சமயத்திலும் கண்ணன் என் கூட இருந்து இன்ஸ்டாகிராம், யூடியூப் என்று எனக்கு சப்போர்ட் பண்னான். இப்ப சோசியல் மீடியாவில் இருந்து வர பணத்தை வைத்து ஏதோ சமாளித்துக் கொண்டு இருக்கிறேன். கண்ணன் மூலமாகத்தான் ஐஸ்வர்யா என்கிற ரோலில் நடிப்பது வெளியே தெரிந்தது. இப்ப வரைக்கும் கண்ணனுடைய ரசிகர்கள் அவனை வைத்து தான் என்னையும் கொண்டாடுகிறார்கள்.

 

Written by