ராஜா ராணி சீரியலில் இருந்து விலகுகிறாரா ஆல்யா மானசா? சஞ்சீவ் அவரே சொல்லிய பதில்! வி ய ப் பில் ரசிகர்கள்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி 2 சீரியலில் ஆலியா மானசா கதாநாயகியாக நடித்து வருகிறார். ஆலியாவிற்கு ஏற்கனவே ஐலா என்கிற பெண் குழந்தை இருக்கிறது. தற்போது மீண்டும் ஆலியா மானசா இரண்டாவது குழந்தைக்கு கர்ப்பமாக இருக்கிறார். கர்ப்பமாக இருப்பதால் ஆலியா மானசா சீரியலை விட்டு விலகுவார் என எதிர்பார்த்த சமயத்தில் 8 மாத நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் போதும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

ஆலியாவின் மன தைரியத்தை பார்த்து ஆலியாவின் கணவனான சஞ்சீவ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதாவது ஆலியா எப்போதுமே மன துணிச்சலுடன் எல்லா விஷயங்களையும் சமாளிக்க கூடியவள். நடிக்க வேண்டிய சீன் இல்லை என்றாலும் கூட சரியாக ஷூட்டிங் இடத்திற்கு சென்று விடுவார்.

அதுமட்டுமல்லாமல் முதல் குழந்தை பிறந்து சில மாதங்களிலேயே கடுமையான உடற்பயிற்சி செய்து மீண்டும் சீரியலில் இணைந்து கொண்டார். ஆலியாவின் மன தைரியத்தை பார்த்து நான் மட்டுமல்ல எனது குடும்பத்தினருமே வியப்பில் தான் உள்ளோம் என கூறியுள்ளார்.

இது மட்டுமல்லாமல் இன்னும் இரண்டு மாதங்களில் ஆலியா அழகிய குழந்தையை பெற்றெடுக்க உள்ளார். பிரசவத்திற்கு பிறகும் ஆலியா மீண்டும் நடிக்க வருவார் என கூறியுள்ளார். ராஜா ராணி சீரியலில் ஆலியாவிற்கு பதிலாக யாரையும் நடிக்க வைக்க முடியாது, ஆலியா தான் நடிப்பார் என ராஜா ராணி தொடரின் இயக்குனர் பிரவீன் உறுதுணையாய் இருந்ததற்கு நன்றி எனவும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Written by