ஜோடியாக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த கலர்ஸ் தமிழ் சீரியல் அம்மன் ஜோடி! என்ன விசயம் தெரியுமா? மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

விஜய், ஜீ தமிழ், சன் தொலைக்காட்சி மற்றும் கலர்ஸ் தமிழ் முதலான தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் மக்களின் மத்தியில் பிரபலமாகி வருகிறது. அதிலும் இதயத்தை திருடாதே, அம்மன் போன்ற சீரியல்களை மக்கள் அதிகமாக விரும்பி பார்த்து வருகின்றனர். அம்மன் தொடர் இரண்டு சீசன்களை கடந்து தற்போது அம்மன் சீசன் 3 ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் அம்மன் வேடத்தில் பவித்ரா கவுடா நடித்து வருகிறார். தற்போது பவித்ரா கவுடா அம்மன் 3 சீரியலில் நடித்த அனுபவம் குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதாவது ஆரம்பத்தில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க பயந்தேன். அதிக எடை கொண்ட அணிகலன்களை அணிந்து கொண்டு நடிக்க கஷ்டமாக இருந்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல அந்த கதாபாத்திரத்திலேயே மூழ்கி விட்டேன்.

இந்த சீரியலில் நடிப்பதற்காக கத்திச்சண்டை கற்று கொண்டேன் என கூறியுள்ளார். இந்த சீரியலில் நடிப்பதற்கு முன்பாகவே கன்னட சீரியலில் வில்லியாக நடித்திருக்கிறேன். எனது நண்பர்கள் தான் சீரியலில் நடிக்க என்னை மிகவும் ஊக்கப்படுத்தினார்கள். கன்னட சீரியலில் நடித்ததன் மூலமாகவே எனக்கு அம்மன் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இதுமட்டுமல்லாமல் சக நடிகைகளான ஆனந்தி அஜய் மற்றும் நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி ஆகியோரும் எனக்கு நடிப்பில் சிறந்த அனுபவத்தை கொடுத்துள்ளனர். ஆரம்பத்தில் மக்கள் என்னை சக்தி கதாபாத்திரத்துக்கு ஏற்றுக்கொள்வார்களா என பயந்தேன். ஆனால் மக்கள் தற்போது எனக்கு கொடுத்து வரும் ஆதரவிற்கு மிகவும் நன்றி என கூறியுள்ளார்.

Written by