திடீரென்று சீரியலில் இருந்து விலகிய பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்! இனி இவருக்கு பதில் இவர்! சோகத்தில் ரசிகர்கள்

தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் தொடர்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேப்பை பெற்று விடுகிறது. ஒவ்வொரு சேனலும் தங்கள் சேனலின் டிஆர்பி ரேட்டிங்காக புதுப்புது கதைக்களத்துடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது.

இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும், அவரின் கணவராக சதீசும் நடித்து வருகிறார்கள். மேலும், இல்லத்தரசிகளின் பேவரட் சீரியலாகவும் பாக்கியலட்சுமி திகழ்கின்றது. இந்த தொடர் குடும்ப பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள், போராடுகிறார்கள் என்பதை மையப்படுத்தி உருவாகி உள்ளது. தற்போது இந்த சீரியல் பல திருப்பங்களுடன் தற்போது சென்று கொடுக்கிறது.

இந்த நிலையில் தற்போது இந்த சீரியல் இருந்து முக்கிய நடிகர் ஒருவர் விலகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் வேற யாரும் இல்லைங்க, செழியன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஆர்யன் தான். தற்போது இவர் பாக்யலட்சுமி சீரியல் இருந்து விலகி இருக்கிறார். இந்த சீரியலில் செழியன் அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர் இதற்கு முன்பு கடைக்குட்டி சிங்கம் என்ற தொடரில் நடித்தார். மேலும், தவிர்க்க முடியாத காரணங்களால் தான் பாக்யலக்ஷ்மி தொடரிலிருந்து ஆர்யன் விலகி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து சேனல் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

மேலும், இவர் வெளியேறுகிறார் என்று தெரிந்ததிலிருந்து ரசிகர்கள் பலரும் என்ன காரணம்? உங்களுக்கு பதில் யார் வருகிறார்கள்? இனி செழியன் கதாபாத்திரத்தில் எந்த நடிகர் நடிக்க போகிறார்? என்று பல்வேறு கமெண்டுகளை போட்டு வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் செழியனுக்கு பட வாய்ப்பு கிடைத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. யார் வருகிறார்? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். கடந்த ஆண்டு தான் ஆரியன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் செம்பருத்தி சீரியல் கதாநாயகி பார்வதியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுடைய திருமணம் எளிமையாக நடந்தது. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. திருமணத்திற்கு பிறகும் ஷபானா சீரியலில் நடித்துக் கொண்டு வருகிறார். அதேபோல் ஆரியனும் சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார். இப்படி இருக்கும் நிலையில் இவர் சீரியல் இருந்து விலகியது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் ஆர் யனுக்கு பதில் ராஜபார்வை சீரியல் புகழ் விகாஷ் சம்பத் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Written by